Friday, May 3, 2024
HomeLatest Newsஉக்ரேன் செர்னோபில் அணுசக்தி நிலைய கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் அபாயம்!!!

உக்ரேன் செர்னோபில் அணுசக்தி நிலைய கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் அபாயம்!!!

ரஷிய படைகளால் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை இலக்கு வைத்து தற்போது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் உக்ரைனில் அணுஉலை விபத்து நடைபெற்ற செர்னோபில் அணுசக்தி நிலையத்தை ரஷிய படைகள் சூழ்ந்துள்ள நிலையில் ரஷிய படைகள் ‘பொறுப்பற்ற’ செயல்களில் ஈடுபட்டதாக உக்ரேனிய மூத்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.


மேலும் உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் குறிப்பிடும்போது உக்ரைனில் மட்டுமல்லாமல் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் சமூகவலைதளத்தின் மூலமாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரஷியப் படைகள்அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தை இராணுவமயமாக்குகின்றன.அத்துடன் ரஷியப் படைகள் பழைய மற்றும் மோசமாகப் பராமரிக்கப்பட்ட ஆயுதங்களை பெரிய அளவில் அங்கு கொண்டு சென்றன எனவும் அணுமின்நிலையத்தின் சிதைந்த நான்காவது அணுஉலையைச் சுற்றி கட்டப்பட்ட கட்டுமானத்தை சேதப்படுத்தும் அபாயத்தை ரஷியப் படைகள் உருவாக்குகின்றன.

இதேவேளை குறித்த ரஷிய படைவீரர்களின் பொறுப்பற்ற மற்றும் தொழில்சார்ந்த நடவடிக்கைகள் உக்ரைனுக்கு மட்டுமல்ல கோடிக்கணக்கான ஐரோப்பியர்களுக்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன் இதனால் ஐரோப்பிய நாடுகளிலும் வளிமண்டலத்தில் கணிசமான அளவு கதிரியக்க தூசியை வெளியிட வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News