எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் மோடிக்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கும் இடையில் உஸ்பெஜிஸ்தானில் நேரடியாக சந்திக்கவுள்ளதாகவும் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாகவும் தொவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கிடையிலான உறவில் அடுத்த நகர்வு குறித்த சிந்திக்கும் தருணம் இதுவென்றும் குறிப்பாக எரிசக்தி மற்றும் உணவு பொருளாதார பரிமாற்றங்களை ஏற்படுத்துவது குறித்த தெளிவான கலந்துரையாடலான அமையும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் இந்த வருடத்தின் முதல் பாதியில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் சுமார் 120 வீதம் வரை அதிகரித்திருப்பதாகவும் தொடர்ந்தும் அந்த அதிகரிப்பை உயர்த்துவதற்கு தேவையான புதிய நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.