Thursday, April 18, 2024
HomeLatest Newsநாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!

நாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி போடப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3வது என்ஜின் செயலிழந்த நிலையில், ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசா ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் சோதனை முயற்சி, தொழில் நுட்பகோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்து, பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராக்கெட் ஏவுதல் 3-வது முறையாக தாமதமாகும் என்றும், வருகிற 23-ம் தேதி ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறிய நாசா, வரும் 27-ம் தேதி அன்று ராக்கெட்டை செலுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

ஆர்டெமிஸ் – 1 விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லாது; நிலவில் இறங்காது. ஆனால் சோதனை முயற்சியாக பொம்மைகளை ஏற்றிச் சென்று பூமிக்கு திரும்பும்.

நிலவின் மேற்பரப்பில் இருந்து 97 கி.மீ., அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்கவிட நாசா திட்டமிட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ள நிலையில், நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகே ஒரியன் விண்கலத்தை பறக்க விட நாசா திட்டமிட்டு உள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 ஏவுதல் திட்டத்தின் 3வது முயற்சியை செப்டம்பர் 27ஆம் தேதி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 9.07 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

இந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை என்றால், 4வது முறையாக அக்டோபர் 2ம் தேதி மீண்டும் நிலவுக்கு செலுத்தப்படும் என நாசா கூறியுள்ளது. முன்னதாக ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில சிக்கல்களும் கண்டறியப்பட்டு சீர் செய்யப்பட்டு வருகிறது என நாசா மேலும் தெரிவித்தது.

Recent News