Friday, April 26, 2024
HomeLatest Newsஅரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம்!

அரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம்!

அரிசி இறக்குமதி நிறுத்தப்படாவிட்டால் நாட்டின் சகல சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அரிசிக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.

நாட்டில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக அரிசி உற்பத்தியில் ஈடுபடும் சுமார் 90 சிறிய மற்றும் நடுத்தர ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Recent News