Monday, December 23, 2024
HomeLatest Newsஅதிகரிக்கும் கலவரம் - பலிக்காடாகும் பாடசாலைகள்....!

அதிகரிக்கும் கலவரம் – பலிக்காடாகும் பாடசாலைகள்….!

பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையின்போது அவர்கள் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு பள்ளிக்கூடத்தை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தனர்.

இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. விவகார அலுவலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அந்த பாடசாலைகளை விட்டு வெளியேறுமாறு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recent News