இந்திய வம்சாளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் சமீபத்தில் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை ,பிரதமர் மற்றும் குடும்பத்தினர் கலிபோர்னியா சென்றுள்ள நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டு அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பிரதமர் வீட்டில் உள்ள பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் வீட்டினுள் நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.