Monday, January 27, 2025
HomeLatest NewsWorld Newsசிட்னியில் கலவரம்: இதுவரை 10 பேர் கைது!

சிட்னியில் கலவரம்: இதுவரை 10 பேர் கைது!

சிட்னி தேவாலய வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டவர்களில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிட்னி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே 27 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார்மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.இக்கலவரத்துடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையிலும் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

Recent News