Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் போர் தொடர்பில் தீர்மானம் - இந்தியாவை அழைத்த சவூதி..!

உக்ரைன் போர் தொடர்பில் தீர்மானம் – இந்தியாவை அழைத்த சவூதி..!

மேற்கத்திய நாடுகள், இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய வளரும் நாடுகளை அழைத்து, வருகின்ற ஆகஸ்ட் மாதம் உக்ரைன் பற்றி பேச்சுவார்த்தை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.


ஜெட்டாவில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் இந்தோனேசியா, எகிப்து, மெக்ஸிகோ, சிலி மற்றும் சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா பங்கேற்காது எனவும் கூறப்படுகிறது . உக்ரைனுக்கு சாதகமான அமைதி தீர்மானங்களை மேற்கொண்டு சர்வதேச ஆதரவைப் பெற உக்ரைன் மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் முயற்சிக்கின்றன.


எனினும் மறுபக்கம் ரஷ்யாவின் பிராந்திய உரிமைகோரல்களை கீவ் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உக்ரேனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கிரெம்ளின் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News