Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஇம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு - இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் அதிரடி..!

இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு – இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் அதிரடி..!

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வன்முறை போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி இம்ரான் கான் தரப்பில் நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 9 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 3 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றமும், 6 மனுக்களை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.

Recent News