Tuesday, May 14, 2024
HomeLatest NewsIndia Newsஒடிசாவில் கோலாகலமாக தொடங்கிய ரத யாத்திரை...!லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்...!

ஒடிசாவில் கோலாகலமாக தொடங்கிய ரத யாத்திரை…!லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்…!

ஒடிசா மாநிலம் புரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக ஆரம்பமாகிய நிலையில் அந்த ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது.

அங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை 9 மணிக்கு கோலாகலமாகத் ஆரம்பமாகியுள்ளது.

அத்துடன், பல்வேறு ஆச்சரியங்கள் அடங்கிய இக்கோயிலில் ஜெகந்நாதரான கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை ஆகிய மூவருக்கும் நடைபெறும் ரத யாத்திரை மிகவும் உலக புகழ்பெற்ற ஒன்று.

காலை 9 மணிக்கு முன் ஜெகந்நாதர், பாலபத்ரர், சுபத்ரா, சுதர்சன சிலைகள் தேர்களில் நிறுவப்பட்டு மங்கள ஆர்த்தி செய்யப்பட்டது.

பிற்பகல் ஒரு மணியளவில் புரியின் அரசர் கஜபதி திவ்யசிங் தேவ், தேர்களின் முன் தங்கத் துடைப்பம் கொண்டு துடைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 3 மணியளவில் தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுவதற்காக புரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Recent News