Tuesday, May 14, 2024
HomeLatest Newsஉறிஞ்சி எடுக்கப்படும் நிலத்தடி நீர்...!நிலைகுலையும் பூமியின் சுழற்சி...!விஞ்ஞானிகள் பகீர்...!

உறிஞ்சி எடுக்கப்படும் நிலத்தடி நீர்…!நிலைகுலையும் பூமியின் சுழற்சி…!விஞ்ஞானிகள் பகீர்…!

பூமியில் இருந்து அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை மனிதர்கள் உறிஞ்சி எடுப்பதால் பூமி 1993 – 2010 ஆண்டுகளுக்கு இடையில் 80 செ.மீ. கிழக்குப் பகுதியில் சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில், 1993 – 2010 வரை மட்டும் மனிதர்களால் 2150 ஜிகா டன் நிலத்தடி நீர் உறிஞ்சப்ட்டுள்ளது. இது 6 மி.மீ.க்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாகவும் 2016 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும் தற்பொழுது வரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை.

1993 – 2010 வரை மேற்கு வட அமெரிக்கா வடமேற்கு இந்தியாவில் மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதால் பூமியின் பல பகுதிகளில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆயினும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுப்பதற்கு பல நாடுகள் பல்வேறுபட்ட திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பூமியின் சுழற்சி துருவமானது பொதுவாக ஓர் ஆண்டிற்குள் பல மீட்டர்கள் மாற்றமடைவதால் நிலத்தடி நீரை எடுப்பதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் பருவங்களை மாற்றுவதற்கான எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News