Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsபாகிஸ்தானில் உருப்பெறும் இனக்கலவரம் - பலர் பலி..!

பாகிஸ்தானில் உருப்பெறும் இனக்கலவரம் – பலர் பலி..!

பாகிஸ்தானில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ள பைசலாபாத்தின் ஜரன்வாலா பகுதியிலுள்ள தேவாலயங்கள் மீது தீ வைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து, அப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.

இதனையடுத்து கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Recent News