இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர்.
அதாவது, இஸ்ரேல் அரசாங்கத்தின் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
அந்த வகையில், புதன்கிழமை இரவு 20 ஆயிரத்திற்கும் அதிகளவான மக்கள் டெல் அவிவ் நகரில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பொழுது, பிரதான நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு தீமூட்டியுமுள்ளனர்.
இதனால், அந்த போராட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவர முடியாது திணறிய பொலிஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்துள்ளனர்.