அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்கவுள்ளார்.
பிரதமர் மோடி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இன்றைய தினம் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உரையாற்றிய பின்னர் அதன் பொழுது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
பின்னர், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்.
அதையடுத்து, இந்த அமெரிக்க பயணத்தின் போது நியூயார்க்கில் பிரதமர் மோடி, பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்கவுள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் தற்பொழுதே பிரதமர் மோடி எலான் மஸ்க்கை முதன் முறையாக சந்திக்க இருக்கின்றார்.
இதற்கு முன்னர் பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா வாகன தொழிற்சாலையில் எலான் மஸ்க்கை சந்தித்தார். அப்பொழுது, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை.
அது மட்டுமன்றி, நோபல் பரிசு பெற்ற பிரபலங்கள், பொருளாதார வல்லுனர்கள், கலைஞர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவத்துறை பிரபலங்கள் என பல்வேறுபட்ட துறைகளை சார்ந்த பிரபலங்களை பிரதமர் சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.