Thursday, January 16, 2025
HomeLatest Newsஉக்ரைன் போர் களத்தில் இணையவழி தாக்குதலை மேற்கொள்ளத் திட்டம்!!

உக்ரைன் போர் களத்தில் இணையவழி தாக்குதலை மேற்கொள்ளத் திட்டம்!!

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு போரினை மேற்கொண்டு வரும் ரஷ்யாவை, போரில் இருந்து விலக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் முயற்சித்து வருகின்றது அமெரிக்கா.

பல தடைகளை ரஷ்யா மீது விதித்தது அமெரிக்கா. மட்டுமல்லாது, ஏராளமான ஆயுதங்களையும், இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி உக்ரைனுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா, தற்போது புதிய முயற்சியாக, இணைய வழித் தாக்குதலை மேற்கொள்ளும் திட்டம் பற்றி உக்ரைனுடன் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்க் களத்தில் உள்ள ரஷ்ய படைகளுக்கு மத்தியில், சைபர் தாக்குதல் எனப்படும் இணையம் சார்ந்த தொடர்பாடல் குழப்பத் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்ய இராணுவத்திற்குள் குழப்பதை உண்டு பண்ணி, பின்னர் உக்ரைன் முன்னேறித் தாக்குதலை நடாத்தி இழந்த நிலப் பரப்புக்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்கா உக்ரைனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News