நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பிறக்கும் குழந்தைக்களிற்கு ஐந்து வருடங்களிற்கு லட்ச கணக்கில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள் என்ற திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, குழந்தைகளை பெற்றுக் கொள்வதை அதிகரிப்பதற்காக அந்நாட்டு அரசு பல சலுகைகளை வழங்கி வருவதுடன், தனியார் நிறுவனங்களும் தமது பங்கிற்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றன.
அந்த அடிப்படையில், ஷாங்காய் நகரை தலைமையாக கொண்டு இயங்கி வரும் ட்ரிப் டாட் காம் என்ற நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வருடம் 1.13 லட்சம் என்ற ரீதியில் ஐந்து வருடங்களிற்கு 5.65 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.