Thursday, December 26, 2024
HomeLatest Newsஆடைத் தொழிலுக்கு சலுகைகள்!

ஆடைத் தொழிலுக்கு சலுகைகள்!

ஆடைத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகையை வழங்கும் வகையில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் பாதகமான பொருளாதாரச் சூழல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழில்துறைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Recent News