இங்கிலாந்தில் வடமேற்குப் பகுதியிலுள்ள கவுண்ட்ஸ் ஆப்செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ம் ஆண்டு ஜீன் முதல் 2016 ம் ஆண்டு ஜீன் வரைபிறந்த குழந்தைகள் வழமைக்கு மாறாக மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குழந்தைகள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட.சம்பவம் பதிவாகியது. ஆயினும் இது தொடர்பில் பொலிஸ் கடந்த 2019 மருத்துவமனையில் விசாரணைகளை முன்னெடுத்தனர். குறிதனத விசாரணையின் போது லூசி லெட்பி என்ற செவிலியப் பெண்ணே குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற சமகாலத்தில் பணியிலிருந்தது தெரியவந்தது.
இந் நிலையில் குறித்த செவிலி குழந்தைகளுக்கு அதிக பாலூட்டியும் , ரத்த ஓட்ட நேரத்தில் ஊசி மூலம் காற்றைச் செலுத்தியதாகவும் விசாரணையின் போது தெரிய வந்தது. இதேவேளை இவர் செய்த குற்றங்களை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந் நிலையில் குறித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுள்ளதால் குற்றத்திற்குரிய தண்டனை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக நீதிபதி மான்செஸ்டர் தெரிவித்துள்ளார்.