Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஆட்டம் போட்ட வடகொரியா அசிங்கபட்ட சோகம்..!

ஆட்டம் போட்ட வடகொரியா அசிங்கபட்ட சோகம்..!

வடகொரியா, கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. இந்நிலையில் நேற்று 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது.

ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது. வடகொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் நேற்றுஅதிகாலை மல்லிஜியாங்-1 என்ற புதிய வகை ராக்கெட்டில் சோஹே செயற்கைகோளை விண்ணில் ஏவியது.

ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ம் நிலைகளின் விமானங்கள் இயல்பாக செயல்பட்டன.ஆனால் 3-ம் கட்டத்தில் அவசர வெடிப்பு அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது என்று வடகொரியா தெரிவித்தது.

மேலும், இந்த தவறுக்கான காரணம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றும் சிக்கலை ஆராய்ந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Recent News