Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsஎல்லை கோட்டை மதிக்கவேண்டும் -ஜின் பிங் ஐ வலியுறுத்திய மோடி..!

எல்லை கோட்டை மதிக்கவேண்டும் -ஜின் பிங் ஐ வலியுறுத்திய மோடி..!

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.

இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.

மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர்.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:

இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது. எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம் மற்றும் இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

Recent News