Tuesday, December 24, 2024
HomeLatest Newsமீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா…!ஜப்பான் கண்டனம்..!

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா…!ஜப்பான் கண்டனம்..!

வடகொரியா மீண்டும் இன்றைய தினம் உயர் வெடிபொருட்கள், ரசாயனம், அணு ஆயுதம் போன்றவற்றை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமையுடைய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

அந்த வகையில், வடகொரியா அதன் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென்கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.

சமீபத்தில், அமெரிக்க படைகளும், தென்கொரிய படைகளும் நடத்திய கூட்டு போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா இந்த ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த செயலானது, பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக ஜப்பான் கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News