Sunday, January 26, 2025
HomeLatest Newsஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் புது வருடத்திற்கு முன்னர் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Recent News