Monday, December 23, 2024
HomeLatest Newsஉக்ரைனுடன் இனி ஒப்பந்தம் இல்லை - ரஷ்யா திட்டவட்டம்...!

உக்ரைனுடன் இனி ஒப்பந்தம் இல்லை – ரஷ்யா திட்டவட்டம்…!

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்

.தாங்கள் கூறியபடி ரஷிய வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் அனுமதி அளிக்காத வரை தானிய ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது. அத்தகைய ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் வழிவகை செய்தால் அடுத்த சில நாள்களிலேயே ரஷிய-உக்ரைன் தானிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்றாா்

.ரஷ்ய உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி ரஷியா, அந்தக் கடல் வழியாக உக்ரைன் பொருள்கள் பிற நா்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.இதனால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு, உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. குற்றம் சாட்டியது.எனினும், உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் காரணம் என்று ரஷியா கூறி வந்தது.இந்தச் சூழலில், உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடா்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெருமுயற்சியில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்தத்தையில் ஆண்டு ஜூலை மாதம் உடன்பாடு ஏற்பட்டது.

அதையடுத்து உருவாக்கப்பட்ட தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற கையொப்பமிடும் நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் துருக்கி அதிபா் எா்டோகனும் ஆகியோா் கலந்துகொண்டனா்.அந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பாா்வையிடுவதற்கும் கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக செல்லும் தானியக் கப்பல்களை ஐ.நா., ரஷியா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷியாவும் உக்ரைனும் சம்மதித்தன.வரலாற்றுச் சறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் மூலம் சா்வதேச அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் தவிா்க்கப்பட்டதாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்க வலியுறுத்தி அந்த ஒப்பந்த அமலாக்கத்தை ரஷியா தற்போது நிறுத்திவைத்துள்ளது.இதன் மூலம், உயிா் காக்கும் உணவுப் பொருள்களை தனது போா் ஆயுதமாக புதின் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

Recent News