ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய உயர்ஸ்தானிகராக ஒஸ்திரிய நாட்டின் இராஜதந்திரியும் சிரேஷ்ட ஐ.நா ஊழியருமான வொல்கர் ட்ருக்கை நியமிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக, முன்னாள் உயர்ஸ்தானிர் மிச்செல் பச்செலெட்டின் பதவிக்காலம் ஓகஸ்ட் 31 அன்று முடிவடைந்தது.
இந்நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், புதிய வொல்கர் ட்ருக்கின் பெயரை முன்மொழிந்ததை அடுத்து, 193 உறுப்பினர்களைக் கொண்ட சபை ஒருமித்த கருத்துடன் நியமனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.