நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் மற்றும் எண்மயக்கருவிகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை, நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் ராபர்ட் டிஜ்கிராஃப் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராபர்ட் டிஜ்கிராஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானமானது மாணவர்களின் கவனச்சிதறல் காரணமாகவே எடுக்காட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், மருத்துவ காரணங்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களிற்கும் மாத்திரம் கையடக்க தொலைபேசி போன்ற எண்மயக்கருவிகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும் வழங்கப்படும் எனவும் நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் ராபர்ட் டிஜ்கிராஃப் அறிவித்துள்ளார்.
அத்துடன், “கைப்பேசிகள் எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தாலும், அவை வகுப்பறையில் இல்லை” என்று கல்வி அமைச்சர் ராபர்ட் டிஜ்கிராஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், அமைச்சகம், பள்ளிகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிற்கு இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.