Tuesday, December 24, 2024
HomeLatest Newsவேற்றுக்கிரகம் போல் தோற்றமளிக்கும் மர்ம வளைவுகள்

வேற்றுக்கிரகம் போல் தோற்றமளிக்கும் மர்ம வளைவுகள்

பார்ப்பதற்கு வேற்றுக்கிரக இடம் போல் தெரியும் இது சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள மர்ம வளையங்களாகும். இந்த சாதாரண வளையத்தில் என்ன மர்மம் இருக்க போகிறது என்று நினைத்து விடாதீர்கள்.இதன் மைய விட்டமே சுமார் 40 கிலோ மீற்றர் ஆகும். இதற்கு ரிச்சாட் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது

மேலும் ,இதனை போலவே 2 க்கு மேற்பட்ட பழமை வாய்ந்த மாபெரும் வளைவுகள் அடுக்கடுக்குடன் சீரான இடைவெளி தோற்றத்துடன் அமைந்துள்ளது.இந்த அமைப்பு ஏறக்குறைய 300 கிலோ மீற்றர் உயரத்தில் இருந்து கூட தெளிவாக காண முடியுமாம்.ஆனால் அருகில் இருந்து பார்த்தால் ஒன்றுமே தெரியாதாம்.

இவ்வாறான மிகப்பிரமாண்டமான வளைவுகள் எப்படி பாலைவனத்தில் உருவாக்கியது என இன்றுவரை யாராலும் கண்டறியப்படவில்லை.

இதன் உருவாக்கத்திற்கு விண்கற்களின் தாக்கம் அல்லது எரிமலையின் வெடிப்பு ஆகியன இருக்கலாம் என இரு காரணங்கள் யூகங்கள் அடிப்படையில் மட்டுமே சொல்லப்படுகிறது.

Recent News