Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமாயமான அதிநவீன போர் விமானம் - வெளியான பரபரப்பு தகவல்..!

மாயமான அதிநவீன போர் விமானம் – வெளியான பரபரப்பு தகவல்..!

உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள அமெரிக்கா படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.

திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நவீனரக போர் விமானம் மாயமான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News