மியான்மாரில் மியான்மர் ராணுவத்துக்கும், சிவில் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் காரணமாக 301 குழந்தைகள் மற்றும் 208 பெண்கள் உட்பட சுமார் 718 மியான்மர் நாட்டினர் இந்தியாவின் மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த அகதிகளை வெளித்தள்ளுமாறு மணிப்பூர் அரசு, எல்லைக் காவல் படையான அசாம் ரைபிள்ஸிடம் கேட்டுக் கொண்டதுடன், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த விரிவான அறிக்கையையும் கோரியுள்ளது.
தற்போது மணிப்பூரில் மியான்மர் எல்லையில் பல்வேறு இடங்களில் அகதிகள் தங்கியுள்ளனர்.
மியான்மரில் தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சாத்தியமான சர்வதேச மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மணிப்பூர் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஊடுருவல்கள் பதிவாகியுள்ளமை பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
2021 பிப்ரவரியில் மியன்மாரை இராணுவம் கையகப்படுத்தியதிலிருந்து ஆயிரக்கணக்கான மியன்மாரீஸ் ஏற்கனவே மிசோரம் மற்றும் மணிப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.