சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. மறுபுறம் உயிரிழப்புக்களும் உச்சத்தை தொட்டு வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால் பிணவறைகள் நிரம்பி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் இரத்தம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும் இன்னும் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சீன அரசு கொரோனா தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.