Saturday, May 4, 2024
HomeLatest Newsமாலை தீவின் முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இது தான் கரணம்

மாலை தீவின் முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இது தான் கரணம்

மாலை தீவின் முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் குறித்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு முன்னரும் இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் யாமீன் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றமை மற்றும் பணச்சலவை குற்றம் என்பன நிரூபிக்கப்பட்டதையடுத்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 மில்லியன் டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் யாமீன் 2018 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து தனது அதிகாரத்தை இழந்தார்.

அதன் பின்னர், 1 பில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றத்திற்காக அவருக்கு 2019 இல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர், வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்ட அவர் 2020 ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இதேவேளை, வருகின்ற 2023 ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்காக மாலைதீவின் முற்போக்குக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Recent News