Thursday, March 13, 2025
HomeLatest Newsமீண்டும் ஏவுகணை சோதனை...!அதிர வைக்கும் வட கொரியா...!

மீண்டும் ஏவுகணை சோதனை…!அதிர வைக்கும் வட கொரியா…!

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் பல்வேறுபட்ட எதிர்ப்புக்களை மீறி வட கொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.

அந்த வகையில், வடகொரியா கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஆயினும், இது தொடர்பான முழுமையான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அத்தோடு, அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், வட கொரிய – தென் கொரிய எல்லைக்கு அருகே தென் கொரியா மிகப் பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

அந்த போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

Recent News