Tuesday, May 21, 2024
HomeLatest Newsகுற்றவாளியை அகதியாக ஏற்க முடியாது...!நியூசிலாந்து அதிரடி...!

குற்றவாளியை அகதியாக ஏற்க முடியாது…!நியூசிலாந்து அதிரடி…!

இலங்கையை சேர்ந்த 33 வயதான புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கையை நியூசிலாந்து நாட்டின் தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது.

அவர் ஏதிலி அல்லது பாதுகாக்கப்பட்ட ஆள் என்ற அந்தஸ்தை வாங்குவதற்கே அந்நாட்டின் குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயம் மறுத்துள்ளது.

அங்கு குறித்த நபர், பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நாணய பரிமாற்றம் போன்றவற்றிற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்த பொழுது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அவர் தாய் நாட்டிற்கு திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து எனவும் வாதிட்டுள்ளார். எனினும் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

அவர், இலங்கையில் 2013 ஆம் ஆண்டளவில் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அவரது குடும்பத்தினர் உள்ளூர் அதிகாரிகளிற்கு பணம் செலுத்திய நிலையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், 2014 இல் கல்விக்காக நியூசிலாந்திற்கு இடம் பெயர்ந்துள்ளதுடன், பல்வேறுபட்ட மாணவர் விசாக்களில் அந்த நாட்டில் அவர் தங்கியுள்ளார்.

இதன் பொழுதே, குறித்த நபர் போதைப்பொருள் பாவனை மற்றும் ஏனைய குற்றங்களிலும் ஈடுபட்டார் என்பதை தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News