Tuesday, December 24, 2024
HomeLatest Newsதிருமலை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாரிய பாதிப்பு

திருமலை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாரிய பாதிப்பு

திருகோணமலை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதாகப் பாதிப்படைந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் கடலுக்குத் தொழிலுக்குச் செல்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இம்மாவட்டத்தின் திருக்கடலூர், புல்மோட்டை, நிலாவெளி மற்றும் ஜமாலியா போன்ற பிரதேசங்களில் உள்ள மீனவர்களின் படகுகள், வள்ளங்கள் கரையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காகக் காத்திருந்தாலும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் மீனவர்களின் கடற்றொழில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தாம் சிரமங்களின்றி எரிபொருளைப் பெற மீன்பிடித் திணைக்களம் இலகுவான வழிமுறைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent News