Monday, January 27, 2025
HomeLatest Newsஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்; 250 இற்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்; 250 இற்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 150 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் (Khost) நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை மேற்கோள்காட்டியதன்படி, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தரவுகளுக்கு அமைய, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நில அதிர்வு உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News