Wednesday, January 15, 2025
HomeLatest NewsWorld Newsமணிப்பூர் கொடுமை, கண்டனம் வெளியிட்ட அமெரிக்கா..!

மணிப்பூர் கொடுமை, கண்டனம் வெளியிட்ட அமெரிக்கா..!

மணிப்பூர் விவகாரம் தொடர்பில் வெளியான கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.


மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்தமை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தபட்ட வன்முறை மிருகத்தனமானது.மிகவும் பயங்கரமானது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான தீர்வை அமெரிக்கா விரும்புவதோடு அனைத்து குழுக்கள், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனிதாபிமான தேவைகளுக்கு பதிலளிக்குமாறும் அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்து உள்ளார்.

Recent News