Monday, December 23, 2024
HomeLatest Newsசண்டைகளுக்கு நடுவே தனுஷின் “மேகம் கருக்காத” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மைனா- விக்ரமன்!

சண்டைகளுக்கு நடுவே தனுஷின் “மேகம் கருக்காத” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மைனா- விக்ரமன்!

பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் சண்டைகளுக்கு நடுவில் மைனா நந்தினியின் நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6, ஆரம்பித்து ஆறாவது வாரம் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் 17 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் புதிய டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நீயா நானா என சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த வாரத்தில் கொடுக்கப்பட்ட Factory Taskல் தனலட்சுமி, அமுதவாணன் மிக ஆக்ரோஷமாக விளையாடி வருவதாக கூறப்படுகிறது.மணி, விக்ரமனுடன் மோதல் என பரபரப்பாக பிக்பாஸ் சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் அனுப்பும் இனிப்பு பொருட்களுக்கான அட்டையை பெறுவதில் ஒவ்வொரு நபருக்கும் மோதல் வெடிக்கிறது.

மைனா நந்தனியின் குத்தாட்டம்

இந்நிலையில் மைனா நந்தனி மற்றும் விக்ரமன் தனுஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காத” பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் “சண்டைகளுக்கிடையில் இந்த கிளுகிளுப்பு தேவையா மைனா? ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்

Recent News