Sunday, January 19, 2025
HomeLatest Newsசேலை கட்டிய மகிந்த – கொழும்பில் வெடித்தது போராட்டம்

சேலை கட்டிய மகிந்த – கொழும்பில் வெடித்தது போராட்டம்

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைக் கண்டித்தும்,சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவம் பொறிக்கப்பட்ட முகக்கவசத்துடன் சேலை அணிந்து நபரொருவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் உருவப் பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Recent News