Wednesday, December 25, 2024
HomeLatest Newsவிலை அதிகரிக்கப்போகும் லிட்ரோ எரிவாயு!

விலை அதிகரிக்கப்போகும் லிட்ரோ எரிவாயு!

சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனத் தகவல்கள் முன்னதாக தெரிவித்தன.

இதன்படி 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கப்படக்கூடும் என அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.

கடந்த ஜனவரி 5ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி குறித்த எரிவாயு கொள்கலன் 4 ஆயிரத்து 409 ரூபாவாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 770 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து லாப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையைக் குறைத்தது.

12.5 கிலோகிராம் எடைகொண்ட லாப்ஸ் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 5 ஆயிரத்து 80 ரூபாவாக உள்ளது.

Recent News