நாட்டிற்கு ஒரு தொகுதி லிட்ரோ எரிவாயுவை விநியோகிப்பது தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.
இந்த நிலையில் நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் என்பவை தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.