மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியhனார் மேலும் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.51 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததாகவும் அதையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புப் பணியினர் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் நிலச்சரிவில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் நிலச்சரிவில் உயிருடன் புதைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.