Monday, May 13, 2024
HomeLatest Newsஇந்திய தூதரக உறவில் ஏற்பட்ட விரிசலின் விளைவு - கனடாவிற்கு பேரிழப்பு.

இந்திய தூதரக உறவில் ஏற்பட்ட விரிசலின் விளைவு – கனடாவிற்கு பேரிழப்பு.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனேடியர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.

அதன் பின்னர் இருநாடுகளுடைய தூதுவர்களையும் வெளியேறும் படி கூறி இந்த பிரச்சினை பெரிதானது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு செல்லும் மாணவர்கள் அச்சமடைந்ததன் காரணமாக கனடாவை விட்டு விட்டு மற்றைய நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.

இந்திய மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லாவிட்டால் அது கனடாவிற்கு பாரிய இழப்பாகும் ஏனென்றால் கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி 41 சதவிகிதம் அல்லது 225835 பேர் இந்திய மாணவர்கள் ஆவர்.

அத்துடன் இந்த மாணவர்கள் கனேடிய பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக உள்ளனர் ஆண்டொன்றுக்கு மாத்திரம் அவர்களால் சுமார் 22 பில்லியன் டொலர்கள் வருவாய் கனடாவுக்கு கிடைக்கிறதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைவது நிச்சயம் கனடாவுக்கு பெரிய இழப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News