வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அதில் வடகொரியாவின் அணுஆயுதங்கள் இடம்பெற சாத்திய க்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதற்காக வடகொரிய அதிபர் கிம் பியோங்யாங்கில் இருந்து கவச ரயிலில் ரஷியாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்வார். அங்கு அவர் புடினை சந்திப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. உக்ரைன் -ரஷியா இடையே போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் வட கொரியா அதிக ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று அமெரிக்கா முன்பு எச்சரித்து இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதால் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஆகஸ்ட் 30ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.