Tuesday, December 24, 2024
HomeLatest Newsதனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் - வெளியான அழகிய புகைப்படம்

தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் – வெளியான அழகிய புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானத்தில் இருந்து, கடைசியாக  வெளியான ‘விக்ரம்’ படம் வரை, அனைத்திலிமே ஏதேனும் ஒரு வகையில் ரசிகர்கள் மனதை கவர்த்திழுந்த நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் இன்றைய தினம் 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.

இவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல இயக்குநர் ஷங்கர் கமல் நடித்து வரும்  இந்தியன் 2 படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அதே போல நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் ஒன்றை அனுப்பி இருந்தார்.அதே போல ஹவுஸ்மேட்ஸும் பாட்டுப்பாடி கவிதை வாசித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

மேலும் நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சாரு ஹாசன் என்பதை நாம் அறிவோம். இவர் தளபதி, தில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சாரு ஹாசனின் மனைவி கோமளம்.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது அண்ணன் மற்றும் அண்ணியிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

Recent News