Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsநிலவை நோக்கிய பயணம் - வெற்றி களிப்பில் ஜப்பான்

நிலவை நோக்கிய பயணம் – வெற்றி களிப்பில் ஜப்பான்

ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.

ஆனால் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ராக்கெட் ஏவுதல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்லிம் விண்கலத்தை நேற்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

4 அல்லது 6 மாதங்களில் விண்கலம் நிலவை சென்றடையும் என்றும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News