Tuesday, May 21, 2024
HomeLatest NewsWorld Newsஎதிர்பார்ப்பின் உச்சத்தில் G20 - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு .. !

எதிர்பார்ப்பின் உச்சத்தில் G20 – பலப்படுத்தப்படும் பாதுகாப்பு .. !

சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி 20 ஆகும்.

இக்கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. அத்தோடு பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News