Thursday, January 23, 2025
HomeLatest Newsஅமெரிக்காவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

அமெரிக்காவில் 550 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இணைந்து, இந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, அமெரிக்காவில் சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தின்படி, 250 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200 தாதி உதவியாளர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வேலை வாய்ப்புகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News