இந்தியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான சமகால மற்றும் உற்பத்தி கூட்டாண்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இங்கிலாந்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டாம் துகேந்தத்துடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.
அதன்போது தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
இதேநேரம் மறுபுறம் யு.என். எஸ். சியில் நிரந்தர உறுப்பினருக்கான இந்தியாவின் முன்மொழிவை இங்கிலாந்து ஆதரிக்கிறதாகவும் , ஐரோப்பிய ஒன்றியம், ஜி 8, ஜி 20 மற்றும் உலகளாவிய சூழல்களில் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான இடம் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்தியா மற்றும் இங்கிலாந்தின் நாடாளுமன்றங்கள் பாரம்பரியமாக நெருக்கமான உறவுகளை அனுபவிக்கின்றன எனவும் இங்கிலாந்து சார்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கருத்து முன்வைத்தார்.