Tuesday, May 14, 2024
HomeLatest NewsWorld Newsஏமனில் பயண கைதியாக ஐ.நா. சபை அதிகாரி..!

ஏமனில் பயண கைதியாக ஐ.நா. சபை அதிகாரி..!

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் அனுப்பப்பட்ட சபியுல் அனம் அப்போதைய அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் உட்பட மேலும் 4 அதிகாரிகள் கடத்தப்பட்டார்.

இந்த கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பேற்றதோடு இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்கப்பட்டது.

இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்ததோடு மேலும் அவருடன் கடத்தப்பட்ட 4 பேரையும் விடுவித்துள்ளனர் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News