Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகாசா மருத்துவமனையில் இஸ்ரேலிய தாக்குதல்- விசாரணை நடத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்..!

காசா மருத்துவமனையில் இஸ்ரேலிய தாக்குதல்- விசாரணை நடத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்..!

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் முற்றத்தில் புல்டோசர்களைப் பயன்படுத்தி காயமடைந்த நோயாளிகள் உட்பட பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் நசுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து பாலஸ்தீனிய  சுகாதார அமைச்சர் மை அல்-கைலா “அவசர விசாரணைக்கு” அழைப்பு விடுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று அதாவது நேற்று, மருத்துவமனையின் அருகே இடம்பெயர்ந்த
பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலியப் படைகள் புல்டோசர்களால் தாக்கி அவர்களை நசுக்கி கொன்றதாகவும் பொதுமக்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“புல்டோசர்களைப் பயன்படுத்தி மக்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர். அதை யாரால் செய்ய முடியும்? இந்தக் குற்றத்தைச் செய்த அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்ற கருத்துக்களும் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News