தெற்கு லெபனானில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
நடத்தியுள்ளதாக லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அல்-மன்சூரி மற்றும் மஜ்தால் சவுன் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது. இரண்டு கிராமங்களும் இஸ்ரேல் எல்லையிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.குறித்த தாக்குதலில் பலியானவரகள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தெளிவாக தெரியவில்லை
மேலும் இன்னமும் எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லா குழுவுக்கும்
இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது .இது மட்டுமல்லாமல் கான் யூனிஸின் கராரா பகுதியில் 15 பாலஸ்தீனிய போராளிகளையும்,நகரின் ஹமாத் பகுதியில் பலரையும் இஸ்ரேலிய வீரர்கள் கொன்றுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் தனது சமீபத்திய போர் அறிக்கை புதுப்பிப்பில் கூறுகிறது.இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவை மத்திய காசா முழுவதும் 15 போராளிகளைக் கொன்றன என்று அது மேலும் கூறியது.
பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான Wafa இன் கூற்றுப்படி, இந்த இடத்தில் இஸ்ரேலின் சமீபத்திய சுழற்சி தாக்குதல்களில் குறைந்தது 12 பாலஸ்தீனிய பொதுமக்களைக் கொல்லபட்டதாகவும் , மேலும் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது .